உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வி*டுதலைப் பு*லிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
170 பார்வைகள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி
கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணிகள் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது.

பாரதி பிரதான வீதி, தேவிபுரம் (அ) பகுதி கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக கூறி கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று நேற்றையதினம் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகழ்வு பணியை ஆரம்பித்திருந்தனர். இருப்பினும் ஊடகங்களுக்கான செய்தி சேகரித்தலுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஊடகவியலாளருக்கு அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த அகழ்வுப் பணியின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற போது குறித்த அகழ்வு இடம்பெறும் பகுதிக்குள் செல்வதற்கும், காணொளி மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

நேற்றையதினம் இடம்பெற்ற அகழ்வின் போது எதுவும் கிடைக்காத நிலையில் முதலாம் நாள் அகழ்வு பணி நிறைவு பெற்றிருந்தது. இரண்டாம் நாள் அகழ்வு பணி இன்றையதினம் இடம்பெறவுள்ளது.

இருப்பினும் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0