உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சென்னையில் மே 17 இயக்கத்துடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் பேச்சு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
47 பார்வைகள்

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், தமிழகத்தின் பிரபல தமிழ்த் தேசிய அமைப்பான ‘மே 17 இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்த விசேட சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையில் இடம்பெற்றது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் நெருக்கடிகள், சர்வதேச மட்டத்திலான மனித உரிமைப் போராட்டங்கள் மற்றும் தாயக – தமிழகத் தமிழர்களுக்கிடையிலான சமூக – பண்பாட்டு உறவுகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் அரசியல் விவகாரம் மற்றும் சர்வதேச ரீதியான சமூகக் கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றில், இருதரப்புக்கும் இடையே தொடர்ச்சியான பரஸ்பர ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது என்று தமிழ்த் தேசியப் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

தாயகத்திலும் சர்வதேச தளங்களிலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு இவ்வாறான சந்திப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இருதரப்புப் பிரதிநிதிகளும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் மே 17 இயக்கத்தின் முக்கிய உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0