உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீர்கொழும்பு சிறையில் மோதல்; பாதுகாப்பு கேட்டு கூரையேறிய கைதிகள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
44 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் சிறைச்சாலை வளாகத்துக்குள் கைதிகள் இரு பிரிவாகப் பிரிந்து பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்தத் திடீர் வன்முறைச் சம்பவத்தை அடுத்து, ஒட்டுமொத்த சிறைச்சாலை வளாகத்திலும் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

தாக்குதலில் காயமடைந்த கைதிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பலத்த காயங்களுக்குள்ளாகியிருந்த இரு கைதிகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்த மேலும் இரு கைதிகள் மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கொழும்பிலுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டனர். ஏனைய 33 கைதிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இந்த மோதல் வெடித்ததைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதன் காரணமாகத் தங்களது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என அச்சமடைந்த பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் கட்டடக் கூரை மீதேறித் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டது. அவர்களைத் தொடர்ந்து ஆண் கைதிகள் குழுவொன்றும் சிறைச்சாலை கூரையின் மீதேறித் தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைச்சாலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிறைச்சாலைக்குள் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. அங்கு பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டனர்.

இந்தக் கொடூர மோதல் மற்றும் அதன் பின்னணிக் காரணங்கள் குறித்துச் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவலைக் கைதி ஒருவர் வெளிப்படுத்திய சம்பவமே இந்த மோதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0