உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
49 பார்வைகள்

எப்பாவல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த “தோணி” என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட பெண் ஒருவர் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எப்பாவல, பத்கொலவெட்டிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் ஆவார்.

எப்பாவல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த பெண்ணின் இல்லத்தை அதிரடியாகச் சோதனையிட்ட போதே அவரிடமிருந்து 2.450 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இப்பெண்ணுக்கு, இதற்கு முன்னரும் சட்டவிரோத மதுபானக் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பாக 10 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பிரதேசத்தின் முக்கிய போதைப்பொருள் விநியோகஸ்தராக இவர் செயற்பட்டு வந்துள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் நேற்று சனிக்கிழமை (04) தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதவான், சந்தேக நபரை வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0