உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கட்சி, இனம், மத பாகுபாடுகளின்றி சகல மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் முற்போக்கான புதிய பயணத்தில் தங்களோடு இணைந்து கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“நமது நாட்டின் அரசமைப்புக்குள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய பிரதான மூன்று தூண்கள் காணப்படுகின்றன. அதேவேளை, சுதந்திர மற்றும் சுயாதீன ஊடகத்துறை அதன் நான்காவது தூணாகவும், ஐந்தாவது தூணாக சிவில் சமூக இயக்கமும் விளங்கி ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முதன்மைச் சக்தியாக அமைய வேண்டும்.

நமது நாட்டின் ஒட்டுமொத்த சிவில் சமூக இயக்கங்களினதும் அமைப்புகளினதும் தனித்துவமான நோக்கங்கள் எவ்வாறாக அமைந்திருந்தாலும், அவை அனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரு பொதுவான இலக்கை நோக்கிப் பயணிப்பதே இன்றைய தேவையாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் இத்தகையதொரு தேசிய பணிக்கான வேலைத்திட்டத்துக்கு நாம் அடித்தளம் அமைப்போம். அதற்கமைய, நாளை திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் இந்த விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

உரிமைகள் குறித்து ஜனநாயக முறைமையின்படி பேசும்போது, சில தரப்பினர் தாராளவாத வலதுசாரிக் கருத்துக்களைக் கொண்டு, அது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்கின்றனர். அதேநேரம், இடதுசாரிப் பிரிவினர் அதன் பெரும்பகுதியைப் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி உரிமைகளுக்கே வழங்குகின்றனர். ஆனால், இந்த அனைத்து உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் மூலம் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும்.

எனவே, நடுத்தரப் பாதையைக் கொள்கையாக நம்பும் ஐக்கிய மக்கள் சக்தி, வலதுசாரிகளும் இடதுசாரிகளும் சுட்டிக்காட்டும் அனைத்து உரிமைகளையும் சமமாக முன்னிறுத்தி முன்னோக்கிச் செல்வதே பொருத்தமானது என நம்புகின்றது.

இந்த வேலைத்திட்டத்தில் எவ்வித கட்சிப் பாகுபாடும் கிடையாது. அனைவரினதும் முற்போக்கான கருத்துக்களுக்கும் இதில் உரிய சந்தர்ப்பம் வழங்கப்படும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் போன்றே பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி மற்றும் நலன்புரி போன்ற அனைத்து உரிமைகளுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு பலமிக்க தேசிய அமைப்பை நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம். இதற்காக அனைத்துச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களையும் எங்களுடன் கைகோர்க்குமாறு அன்போடு அழைக்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0