உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நெடுந்தீவின் குடிநீருக்கு அநுர அரசிடம் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
42 பார்வைகள்

நெடுந்தீவில் வாழுகின்ற மக்கள் குடிநீரரைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கபட வேண்டும் என்று ஈ.பி.டி.பி. அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலளார் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையில்-

‘நெடுந்தீவில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கோடு 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியினால் ஆர்.ஓ. பிளான்ற் எனப்படும் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்மூலம் தற்போது நாளாந்தம் 80,000 லீற்றருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டு அது 900 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டும் வருவதாக கூறப்படுகின்றது.

இருந்தபோதிலும், நெடுந்தீவில் தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், 1400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள், வாழ்ந்து வருகின்ற நிலையில், அதனுடன் இணைந்த அரச திணைக்களங்கள் பாடசாலைகள் ஆலயங்கள் என பல பொது தேவைகளுக்காகவும்
தற்போதுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

எனவே, குறித்த விடயத்தில் தற்போதைய அரசாங்கம் அவதானம் செலுத்தி மக்களின் வாழ்வியலுக்கு அவசியமான குடிநீர் தாராளமாக கிடைப்பதற்கான நடடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.’ என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஆர்.ஓ. பிளான்ற் எனப்படும் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் நெடுந்தீவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதிகளசான மழைநீர் தாங்கிகளும் 300 குடும்பங்களுக்கான மலசலகூடங்களும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

39 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0