உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் நிந்தவூர் அல் மதீனா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஜாபிர் வழிகாட்டலில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பொறுப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு, தொடர்புடைய சட்டங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறும் போது கவனிக்க வேண் மம்டிய முக்கிய அம்சங்கள், தற்போதைய சந்தையில் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விலைகள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதான வளவாளர்களாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களான  முஹம்மட் ஸாஜீத் ஸமான் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விரிவான விளக்கங்களை வழங்கினர்.

மேலும், உயர் தரப் பிரிவு ஆசிரியர்களும் நிகழ்வில் பங்கேற்று மாணவர்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

58 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

68 0 0