உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காண்டீபனைக் கைது செய்யுமாறு உத்தரவு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
22 பார்வைகள்

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜே.எஸ். ரத்னமலல தெரிவித்தார்.

வவுனியா மாநகர சபைக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வரின் ஆடை என்பன காணாமல்போயுள்ளன என்று மாநகர சபையின் செயலாளரினால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கமைய, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள மூடிய சுற்றுக்காவல் கமரா காட்சிகளின் உதவியுடன் வவுனியா தலைமைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில், இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்வதற்கான அனுமதியை பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.

பொலிஸாரின் இந்தக் கோரிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் குறித்து விரிவாக ஆராய்ந்த வவுனியா நீதிவான் நீதிமன்றம், வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சு. காண்டீபன் உட்பட நான்கு பேரைக் கைது செய்து, உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

58 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

68 0 0