உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், செயலாளர் மீது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் ஊடக அடக்குமுறைகள் தொடர்வதாகவும், இதற்கு சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரே முழுமையான காரணம் என்று தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர்கள் வன்மையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்றைய தினம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, உப தவிசாளர் தயாபரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, சபையில் ஊடகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். இதனால் சபையில் நீண்ட வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

சபை அமர்வைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்த விபரங்களை வெளியிட்டனர்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள்,

ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு:
இலங்கை வெகுஜன ஊடக அமைச்சின் ஊடக அடையாள அட்டை வைத்துள்ள பூ.லின்ரன் என்ற ஊடகவியலாளரைத் தவிர, வேறு எந்தவொரு உள்ளூர், சுயாதீன அல்லது நிறுவன ஊடகவியலாளர்களையும் சபை அமர்வில் கலந்துகொள்ள தவிசாளரும் செயலாளரும் அனுமதிக்கவில்லை.

கடுமையான நிபந்தனைகள்:
சபை அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர் லின்ரனுக்கும் பல்வேறு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

காணொளிப் பதிவுக்குக் கட்டுப்பாடு:
குறிப்பாக, ஊடகவியலாளருக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு எங்கும் சென்று காணொளிகளைப் (Video) பதிவு செய்யக் கூடாது என்ற முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள் மீதான இந்த ஊடக அடக்குமுறை வெளிப்படையாகவே அரங்கேறி வருகிறது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான ஊடக அடக்குமுறைகள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்த விடாமல் தடுக்கும் இந்தச் செயலுக்கு எதிராகப் பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளின் இந்த ஊடக விவகாரம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

58 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

68 0 0