உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம்; கோட்டை நீதிமன்றில் ‘பி’ அறிக்கை சமர்ப்பிப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஆஸ்திரேலியக் கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி, மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன், திறைசேரியின் செயலாளர் இலங்கைப் பிரஜையே தவிர அவர் வெளிநாட்டுப் பிரஜையல்லர் எனவும், அவருக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது,
“ஆஸ்திரேலியக் கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு எதனையும் மறைக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சால் கடந்த 2026.03.24 ஆம் திகதி விசேட தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கமைய, கடந்த 2026.03.27 ஆம் திகதி விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

நிறுவன மட்டத்திலான உள்ளக விசாரணைகளுக்கு அமைய, இந்த மோசடி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு அதிகாரிகள் தற்காலிகமாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்து கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திறைசேரியின் செயலாளர் இலங்கைப் பிரஜையே தவிர அவர் வெளிநாட்டுப் பிரஜையல்லர் என்றும், அவருக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது என்பதையும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0