உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
59 பார்வைகள்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டெர்வெயிட் (Margaret Satterthwaite) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதும் நீட்டிக்கப்படுவதாக விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ​​இது நிறைவேற்றுத்துறையின் தலையீடு இன்றி இடம்பெறுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களில் அதிகளவான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைப்பதும் தாமதங்களைக் குறைப்பதும் இத்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

62 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

83 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

81 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

69 0 0