உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வடமாகாண தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் யூனியன் கல்லூரி மகத்தான வெற்றி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
46 பார்வைகள்

வடமாகாண தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் யூனியன் கல்லூரி மகத்தான வெற்றியை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற வடமாகாண தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியும் சமநிலைப் பெறுபேற்றைப் பெற்றிருந்தன.

இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நேற்று (28.06.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மிகுந்த திறமையுடனும் தன்னம்பிக்கையுடனும் போட்டியிட்ட தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மகத்தான வெற்றியைப் பெற்று வடமாகாண மட்டத்தில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.

கல்லூரி அதிபர், பொறுப்பாசிரியர் அருட்பணி. ராஜ்குமார் ஆகியோர் இவ்வெற்றிக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் வழிநடத்தியதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0