விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!
ஹங்வெல்ல, எம்புல்கம – பனாகொட வீதியில் எம்புல்கம தேவாலயத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (25) அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த கஹடபிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹங்வெல்ல பொலிஸார் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.