உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், கண்காட்சியும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
29 பார்வைகள்

போசாக்கு மாதத்தை முன்னிட்டு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சியும் இன்றையதினம் நெல்லியடியில் இடம்பெற்றது.

நெல்லியடி பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் போசாக்கு விழிப்புணர்வு பேரணியை ஆரம்பித்து வைக்க நெல்லியடி சந்தியிலிருந்து ஆரம்பமாகி நெல்லியடி மத்திய கல்லூரி ஊடாக வதிரி சந்தியை சென்றடைந்து. அங்கிருந்து மாலை சந்தை வழியாக சென்ற பேரணி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தை சென்றடைந்தது அங்கு போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், பணியாளர்கள், பாடசாலைகளின் மாணவர்கள், பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர்கள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ச.திரவியராஜா மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தி செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு அம்சமாக பழங்கஞ்சி வழங்கப்பட்டதுடன் போஷாக்கான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதேவேளை போசாக்கு விழிப்புணர்வு தொடர்பான வீதி நாடகங்களும் பேரணி கடந்து வந்த பாதையில் காணப்பட்ட பாடசாலைகள் முன்பாக இடம்பெற்றது.

இதேவேளை விழிப்புணர்வு தொடர்பான கருத்துரைகளை யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் வழங்கினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0