சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!
மாத்தறை – தங்காலை வீதியில் சற்றுமுன்னர் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து அம்பாறை நோக்கிச்சென்ற பேருந்தும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச்சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பத்திகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.