உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கிளிநொச்சி, பச்சிளைப்பள்ளி வண்ணங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியிலான சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் குடும்பஸ்தர் முன்வைத்துள்ள ஐந்து அம்சக் கோரிக்கைகள் பின்வருமாறு:

கோரிக்கை 01: விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியைப் பிரிவு செய்து, எஞ்சிய நிலத்தில் இயற்கை எருக்களைப் (சாணம்) பயன்படுத்தி விவசாயம் செய்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கோரிக்கை 02: இப்பகுதியில் பின்தங்கிய சொத்தாகக் காணப்படும் 500 ஏக்கர் காட்டு நிலத்தில், 50 ஏக்கர் காணியை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும். அத்துடன், எமது கிராம மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காகப் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ள மக்களுக்கு அதனை எவ்வித பாகுபாடுமின்றிப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

கோரிக்கை 03: எமது கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பல்வேறு வழிகளிலும் முட்டுக்கட்டையாக இருப்பதுடன், விவசாயத்தை வளர்க்க விடமாட்டோம் எனக் கூறும் எமது கிராம உத்தியோகத்தரை (கிராம சேவையாளர்) உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

கோரிக்கை 04: போதைப்பொருள் பாவனையற்ற, ஒரு அழகான விவசாயக் கிராமத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

கோரிக்கை 05: அரசாங்கத்தினால் எமக்காக அமைக்கப்பட்டு வரும் சமூகக் கட்டமைப்பு முறையான பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு, அரசு ஊழியர்கள் சிலர் மேற்கொள்ளும் சாதிவாதம், மொழிவாதம் மற்றும் இனவாதம் போன்ற பாகுபாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இன்றைய தினம் காலை 8:00 மணியளவில், ஒரு துளி நீர் கூட அருந்தாமல் குறித்த குடும்பஸ்தர் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அப்பகுதி ஊர் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0