உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலைப் பார்வையிட்ட ஜீ.எம்.எம்.எஸ் மாணவர்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவர்கள் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலைப் பார்வையிட இன்று வியாழக்கிழமை கள விஜயம் மேற்கொண்டனர்.

இந்தக் கள விஜயத்தில், இந்த வருடம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக, இஸ்லாம் பாடத்தில் உள்ள அல் – மஸ்ஜித் எனும் பாடத்தை கருப்பொருளாக கொண்டு தரம் 1 இல் கல்வி பயில்கின்ற சுமார் 200 மாணவ, மாணவிகள் பாடசாலையில் இருந்து நடந்து சென்று பார்வையிட்டனர்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினை ஆர்வத்துடன் பார்வையிட வந்த மாணவர்கள், தொழுமிடம், மிம்பர் மேடை, அதான் சொல்லுமிடம், வுழு செய்யுமிடம் போன்ற இடங்களும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் அவர்களினால்
போதிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.

இந்த விஜயத்தில் அதிபர் எம்.ஐ.எம் இல்யாஸ் உட்பட ஆசிரியர் எம்.ஏ.எம். அஸ்மி, ஆசிரியைகளான ஏ.எம். கிதாபியா, என். றிஸ்வானா பர்வின், எஸ்.எல். பஸ்மினா, ஏ.எப். பர்வின், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஐ. அஸ்லம் சுஜா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எப்.நஜீபா, எம்.எல். றிஸ்மியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு மிகப் பிரயோசனமான விளக்கங்கள் இதன்போது வழங்கப்பட்டதாகவும் மாணவர்களுக்கு மிக இலகுவாகப் புரியும் வண்ணம் விளக்கங்களை வழங்கி, முன்மாதிரியான செயற்பாட்டை மேற்கொண்ட பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் முபாரக் உட்பட அதன் நிர்வாகத்தினருக்கு அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகம் தமது விசேடமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இறுதியாக பள்ளிவாசல் தலைவரினால் இனிப்புப் பண்டங்கள் வழங்கியதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் நினைவாக ஒவ்வொரு வகுப்பாக குழுவாக நின்று புகைப்படம் எடுத்து அதனை உடனே பிரிண்ட் செய்து அந்தந்த வகுப்பாசிரியரிடம் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0