உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தம்மால் வெற்றி பெற முடியும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு இன்னும் ஏற்படவில்லை என்றும், குறைந்தது ஐந்து சபைகளிலாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நேரடியாக ஆட்சி அமைக்கும் பலத்தைக் கொண்டுள்ளது என்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது மற்றும் அதில் பொதுஜன பெரமுனவின் தற்போதைய செல்வாக்கு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய பிரதான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய திசைகாட்டி அரசானது மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளக் கடுமையாக அஞ்சுகின்றது. ஒருவேளை இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், தங்களது வாக்கு வங்கி சரிந்து மீண்டும் பழையபடி 3 சதவீதத்திற்கே வீழ்ச்சியடைந்து விடுவோம் என்ற பயம் அரசுக்குள் நிலவுகின்றது. இதனால்தான், மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் பல்வேறு காரணங்களைக் கூறித் திட்டமிட்டபடி இழுத்தடித்து வருகின்றது.

எவ்வாறாயினும், நாட்டில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதில் தனித்தோ அல்லது கூட்டணியாகவோ நிச்சயம் போட்டியிடும். எனினும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் எம்மால் முழுமையாக வெற்றிபெற முடியும் என்ற அதீத நம்பிக்கை இன்னும் எமக்கு ஏற்படவில்லை என்பதை நாம் யதார்த்தமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆனால், தற்போதைய நாட்டின் அரசியல் நிலைவரங்களின்படி, ஏனைய மாகாணங்களில் உள்ள சபைகளில் குறைந்தது ஐந்து சபைகளிலாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நேரடியாக ஆட்சி அமைக்கும் பலத்தைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, எமது தலைமையிலான பலமிக்க கூட்டணியே வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அமோக வெற்றி பெறும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0