உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்குத் தற்போதைய சூழலில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அத்துடன், பல தசாப்த காலமாக விவாதத்துக்குரியதாகக் காணப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்குரிய சட்ட ஏற்பாடுகள் அனைத்தும் தற்சமயம் நிறைவு பெற்று, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே பிரதமர் இந்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெறும் அரசமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்வதை விடவும், நாட்டுக்கு முற்றிலும் புதிய அரசமைப்பு ஒன்றுக்குச் செல்வதே எமது அரசின் பிரதான எதிர்பார்ப்பாகும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இந்த வாக்குறுதியை நாம் நாட்டு மக்களுக்குத் தெளிவாக வழங்கியிருந்தோம்.

புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான விடயத்தில் நாம் இப்போதும் மிகவும் உறுதியாகவே உள்ளோம். அது குறித்த ஆரம்பக்கட்டப் பேச்சுகள் மற்றும் உரிய நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எனினும், அந்த விடயத்துக்குத் தற்போதைய காலகட்டத்தில் முதன்மை முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதை நாம் மறைக்காமல் ஏற்கின்றோம்.

ஏனெனில், நாடு தற்சமயம் எதிர்கொண்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொருளாதாரம், கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய அத்தியாவசியத் தேவைகளுக்கே எமது அரசு தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டமானது இந்த வருடத்துக்குள் நிச்சயமாக நீக்கப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்துவிட்டன. அது தொடர்பான உத்தியோகபூர்வ யோசனை மிக விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதேபோன்று, நீண்டகாலமாகக் கோரப்பட்டு வரும் நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமை ஒழிப்பு என்பது, நாம் கொண்டுவரவுள்ள புதிய அரசமைப்புடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு விடயமாகும்.

முழுமையான மக்கள் அனுமதியுடன் புதிய அரசமைப்பு இலங்கையில் கொண்டுவரப்படும். எமது அரசின் பதவிக்காலத்தில் இன்னும் மூன்று வருடங்கள் எஞ்சியுள்ளன. புதிய அரசமைப்பைத் தயாரித்து அமுல்படுத்துவதற்கு இந்தக் காலப்பகுதி முற்றிலும் போதுமானதாகும். இந்த ஆட்சிக் காலத்துக்குப் பிறகும், எமது மக்கள் நலச் சேவைகளைக் கண்டு நாட்டு மக்கள் எமக்கே மீண்டும் தங்களின் பலமிக்க ஆணையை வழங்குவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0