உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

செம்மணியில் ஒரே நாளில் 19 எலும்புக்கூடுகள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 3 சிறுவர்களுடையது உட்பட ஒரே நாளில் மிக அதிகளவாக 19 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினத்தில் புதிய எலும்புக்கூடுகள் எதுவும் அடையாளம் காணப்படாத போதிலும், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளே இவ்வாறு முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 32ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று யாழ். நீதிவானின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன.

நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 மனித எலும்புக்கூடுகளில், மூன்று சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்குவதுடன், அவற்றில் 3 மனித எலும்புக்கூடுகள் முழுமையற்ற சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. செம்மணி அகழ்வாய்வுப் பணிகளின்போது ஒரே நாளில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வின் 9 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வின் 45 நாட்களும், தற்போதைய மூன்றாம் கட்ட அகழ்வின் 32 நாட்களும் என மொத்தமாக இதுவரை 86 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த 86 நாட்கள் தொடர் அகழ்வாய்வுகளின் மூலம், அங்குள்ள தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டில் இருந்து ஒட்டுமொத்தமாக இதுவரை 409 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்தத் தளங்களில் இதுவரை மொத்தமாக 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம்பெற்ற அகழ்வின் போது, மனித எலும்புகளுடன் இரும்பிலான பெரிய வளையம் போன்ற பொருள் ஒன்றும், கூர்மையான ஆணிகளும், கறுப்பு நிறத்திலான பாசி மணிகளும் உள்ளிட்ட மூன்று முக்கிய சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விசாரணைகளுக்காக நீதிமன்றக் கட்டுக்காவலில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் பகுதி நேற்றைய தினத்தோடு தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது. சிறிய இடைவெளியின் பின்னர், இம்மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்டப் பகுதி எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0