• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

செம்மணி புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக.!

Mathavi by Mathavi
June 23, 2026
in இலங்கை செய்திகள்.
0
செம்மணி புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக.!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் 23.05.2026 இன்று உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியானது தற்போது நாட்டிலே பாரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 390 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக சிறார்கள், பெண்கள், ஆண்கள், முதியோரென பலதரப்பட்டவர்களுடைய எலும்புக்கூடுகளும் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்தவாரம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இந்த புதைகுழி விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமெனவும் உறுதியுரைத்துள்ளார். அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கும் பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதி அமைச்சரின் இந்தக் கருத்து நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதான குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிற்கு நீதிமன்றினால் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பிற்பாடு, குறித்த இராணுவ லான்ஸ்கோப்ரல் செம்மணியில் படையினரால் 300 – 400 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

அவருடைய தகவல்களின் அடிப்படையில் அக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் 15 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து சந்திரிக்கா குமாரதுங்க அரசு இந்த புதைகுழி விசாரணையை கிடப்பில் போட்டிருந்தது.

தற்போது செம்மணி மனிதப் புதைகுழி அடையாளங்காணப்பட்டு, மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக பன்னாட்டு விசாரணையாளர்கள் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தனது மனைவி மூலம் ஜனாதிபதிக்கு சோமரத்ன ராஜபக்ச கடிதமொன்றினை எழுதியிருந்தார்.

மேலும் அக்கடிதத்தில் செம்மணியைத் தவிர, அரியாலை, கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சோமரத்தின ராஜபக்சவிடம் பன்னாட்டு விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டுமெனத் தெரிவித்தார்.

Related Posts

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்றும் சம்பு புற்  தரவைக்கு விஷமிகள் தீ வைத்தனர்!

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்றும் சம்பு புற்  தரவைக்கு விஷமிகள் தீ வைத்தனர்!

by selvan
June 23, 2026
0

யாழ் - பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வலிக்கண்டி பகுதியில் இன்றைய தினமும் விஷமிகளால் சம்பு புற்  தரவைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் உருவான கரும்புகையால் சில நிமிடங்கள்...

சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!

சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!

by selvan
June 23, 2026
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்களால் பாதிக்கப்பட்டோர்...

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!

by selvan
June 23, 2026
0

இலங்கையில் தற்போது அரங்கேறி வரும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்கும் பாரிய பொருளாதார அபாயம்...

சுரேஷ் சலேவை கைது செய்தமை ஒரு கேலிக்கூத்தான விடயம் – சரத் வீரசேகர சாடல்!

by selvan
June 23, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகள் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டு, வெறும் அரசியல் பழிவாங்கலாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர...

நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழை மக்கள் உருவாக்கியுள்ளனர்!

by selvan
June 23, 2026
0

வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் புதிதாக 10 இலட்சம்...

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம் நடத்த தீர்மானம்!

by selvan
June 23, 2026
0

வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் நாளைமறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாகப்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணுக்களைச் சேகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

by selvan
June 23, 2026
0

இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

by Mathavi
June 23, 2026
0

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று, சுகாதார அதிகாரிகளால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின்போது சுகாதார சீர்கேடுகள் உடன்...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

by Mathavi
June 23, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் இப்ராஹிம் என்பவரைப் பாதுகாப்பதற்கே தற்போதைய அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!

தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!

by Mathavi
June 23, 2026
0

இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து இந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி