உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக விரைவில் புதிய சட்டம்! – ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

தற்போது நடைமுறையிலுள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதையும் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் முன்னணி ஆடைத் துறை வர்த்தகர்கள் மற்றும் பெருமுதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நீண்ட காலமாக மனித உரிமை அமைப்புகளாலும், சர்வதேச சமூகத்தினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இந்தப் புதிய சட்டக் கட்டமைப்பு முழுமையாக இரத்துச் செய்யும் என்று ஜனாதிபதி இதன்போது உறுதிப்படுத்தினார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்துக்குப் பதிலாக இன்றைய நவீன சமூகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதே புதிய சட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், அரசியல் பழிவாங்கல்களுக்கோ அல்லது தன்னிச்சையான கைதுகளுக்கோ இடமளிக்காத வகையில், நாட்டின் சாதாரண குடிமக்களின் மனித உரிமைகளையும், ஜனநாயகச் சுதந்திரங்களையும் முழுமையாக உறுதி செய்யும் வகையிலேயே இந்தப் புதிய சட்டமூலம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0