உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இந்த ஆட்சியாளர்கள் கேலிக்கூத்துகளை மக்களுக்கு காட்டி ஆட்சியை பிடித்தார்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது. ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது. ஆனால் நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றது. மேலும் இந்த ஆட்சியாளர்கள் கேலிக் கூத்துகளை மக்களுக்கு காட்டி ஆட்சியை பிடித்திருந்தார்கள். எனவே மக்கள் தெளிவடைய வேண்டும்.நல்ல தலைவர்களை உருவாக்குங்கள். ஒருவருக்கு வாய்ப்பு வழங்காமல் அவர் எவ்வாறு செய்வார் என கேலித்தமாக பேசக்கூடாது. சஜித் பிரேமதாச நாட்டில் உள்ள ஏழை மக்களின் மனதை வென்றவர். அவரை எதிர்காலத்தில் தெரிவு செய்வதன் ஊடாக பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில் இன்று அம்பாறை மாவட்டம் புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,
இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என எல்லோரும் கூறுகின்றனர். இன்று அபிவிருத்தி அடைந்த நாடு என்று சிலர் கூறுகின்றார்கள். இவ்வாறு கூறிய போதிலும் எப்போது எமது நாடு அபிவிருத்தி அடைவது என்று கேட்க விரும்புகின்றேன். அதாவது அபிவிருத்தி அடைவதற்கு தடையாக இருக்கின்ற தலைவர்களை மக்கள் தெரிவு செய்வதனால் தான் இவ்வாறான கேள்விகள் எம் மத்தியில் எழும்புகின்றது.

கோட்டபாய ராஜபக்சவிற்கு அரசியல் வகிபாகம் எதுவும் கிடையாது. அவரது குடும்ப பின்னணியில் வந்தவருக்கு மக்கள் ஆணை வழங்கி இருந்தார்கள். வந்தவர் விவசாயிகளின் பிரச்சினையில் கைவைத்தார். எமது நாடானது விவசாய நாடாக பல ஆண்டுகாலமாக இருக்கின்றது. இவரது வீழ்ச்சிக்கு காரணம் இந்த விவசாயிகளின் வயிற்றில் அடித்தமையாகும். தற்போது இந்த ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு காலத்தில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள். இதனால் இன்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஆட்கள் இல்லை. எனவே தான் இந்த ஆட்சியில் பாதிக்கப்படுகின்ற மக்கள் ஒன்றிணைந்து மிக விரைவில் இந்த ஆட்சிக்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

எனவே தான் இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முன்னெடுப்பும் பொதுமக்களின் வயிற்றில் அடுப்பு எரிவது போன்றுள்ளது. நிச்சயமாக இந்த அரசாங்கத்திற்கு எதிராக பெரிய புரட்சியினை இம்மக்கள் எதிர்காலத்தில் மேற்கொள்வார்கள். இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் முன்னர் இருந்த ஆட்சியாளர்களை குற்றஞ்சாட்டி கொண்டிருந்தார்கள். கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது. ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது. ஆனால் நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றது.

மேலும் இந்த ஆட்சியாளர்கள் கேலிக் கூத்துக்களை மக்களுக்கு காட்டி ஆட்சியை பிடித்திருந்தார்கள். எனவே மக்கள் தெளிவடைய வேண்டும்.
நல்ல தலைவர்களை உருவாக்குங்கள். ஒருவருக்கு வாய்ப்பு வழங்காமல் அவர் எவ்வாறு செய்வார் என கேலித்தமாக பேசக்கூடாது. சஜித் பிரேமதாச நாட்டில் உள்ள ஏழை மக்களின் மனதை வென்றவர். அவரை எதிர்காலத்தில் தெரிவு செய்வதன் ஊடாக பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0