உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சிகிச்சைகள் பெறுவதை விட முன்கூட்டி தடுப்பதே வழி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

நாட்டை அச்சுறுத்தி வரும் டெங்கு நோயிலிருந்து பொதுமக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்கு, அனைத்துக் குடிமக்களும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் மருத்துவர் கபில கண்ணங்கர அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஊடகங்கள் மூலம் அவர் மேலும் விடுத்துள்ள விழிப்புணர்வு அறிவுறுத்தலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“பொதுமக்களாகிய நாமே டெங்கு வைரஸைப் பரப்பும் கொசுக்கள் பெருகுவதற்கான சூழலை உருவாக்கி, அவற்றுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றோம். எனவே, சுயநலமின்றி தங்களைப் பற்றியும், தங்களது குடும்பத்தினர், அண்டை வீட்டார் மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

நமது பார்வைக்கு புலப்படும் இடங்களை மட்டுமின்றி, எளிதில் கண்ணில் படாத மறைவான இடங்களிலும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடும் என்பதால், அவ்வாறான இடங்களை உன்னிப்பாகக் கவனித்துச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, நுளம்புகள் முட்டையிட்டு பெருகக்கூடிய வகையில் தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து இடங்களையும் கண்டறிந்து, நீரை முழுமையாக அகற்றி துப்புரவு செய்ய வேண்டும் அல்லது அத்தகைய பொருட்களை முற்றாக அப்புறப்படுத்த வேண்டும்.

டெங்கு நோயைப் பொறுத்தவரை, நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, அது பரவாமல் முன்கூட்டியே தடுப்பதே மிகச் சிறந்த வழியாகும். டெங்கு காய்ச்சல் தீவிரமடையும் போது ‘டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல்’ அல்லது ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ ஏற்பட்டு, முறையான மருத்துவ நடவடிக்கைகள் இல்லாவிடில் இந்நோய் சில நேரங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயகரமான ஒன்றாக மாறக்கூடும்.

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்த்து, டெங்கு நோய் பரவலைக் குறைந்தபட்ச நிலைக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துத் தரப்பினறையும் ஒன்றிணைந்து, தத்தமது சூழலைத் தூய்மையாகப் பேண பங்களிப்பு வழங்க வேண்டும்.” – என்று மருத்துவர் கபில கண்ணங்கர கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0