உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முன்னாள் எம்.பி. ஜெயானந்தமூர்த்தி காலமானார்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (வயது 61) சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் காலமானார்.

1965 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி பிறந்த இவர், தனது ஆரம்பக் காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியமையுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளராகப் பல முன்னணி ஊடகங்களில் திறம்பட ஊடகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அரசியல் களத்தில் கால் பதித்த அவர், கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, 44 ஆயிரத்து 457 விருப்பு வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு “அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவண நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பலத்த உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக, அவர் தனது குடும்பத்துடன் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர நேரிட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தாயகம் திரும்பிய அவர், பல்வேறு அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

அந்தவகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி இணைப்பாளராக நியமிக்கப்பட்டு, அக்கட்சியின் அரசியல் மற்றும் பிரசாரப் பணிகளில் முன்னின்று உழைத்தார்.

அரசியல்வாதியாகவும், நேர்மையான ஊடகவியலாளராகவும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவரது திடீர் மறைவு, மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0