உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

புலம்பெயர் அமைப்புகளிடம் அரசு பெற்ற நிதியை உடனடியாக வெளிப்படுத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசு எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாட்டு மக்களுக்கு வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். எனவே, புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசு எத்தனை மில்லியன் அல்லது பில்லியன் டொலர்கள் நிதியுதவி பெற்றுள்ளது என்பதையும், இந்த அரசை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக அவை எந்தளவுக்கு நிதி உதவிகளை வழங்கின என்பதையும் அவர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இன்று புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து ஒரு சதமும் கிடைக்காது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அவ்வாறெனில், இதற்கு முன்னர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி எங்கே சென்றது, அது எந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது, யாருக்கு வழங்கப்பட்டது என்பது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் வழங்கப்பட வேண்டும்.

தற்போது இந்த நாட்டை பலவீனப்படுத்துவதற்கும் தேசிய அடையாளத்தை சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சித்து வருகின்றன என்ற சந்தேகம் மக்களிடையே காணப்படுகின்றது. குறிப்பாக, புத்தசாசனத்தை பலவீனப்படுத்தவும், நாட்டின் பாரம்பரிய மத மற்றும் கலாச்சார அடித்தளங்களை சீர்குலைக்கவும் சில தரப்புகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன என்ற அச்சம் எழுந்துள்ளது.

புலம்பெயர் அமைப்புகளுக்கு இவ்வளவு பெரியளவில் நிதி எங்கிருந்து கிடைக்கின்றது, யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவை பயன்படுத்தப்படுகின்றன என்பதும் ஆராயப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மை, தேசிய ஒற்றுமை மற்றும் புத்தசாசனத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம். இந்த நாட்டை வெளிநாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடுவோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உண்மையில் நேர்மையான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தால், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசுக்கிடையிலான தொடர்புகள் குறித்தான முழுமையான தகவல்களை நாட்டுக்கு வெளியிட வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் துணைபோகும் சக்திகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0