உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வெவ்வேறு இடங்களில் கோடாவுடனும் மதுபானத்துடனும் மூவர் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, பெருமளவிலான சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கமன்கெதர பகுதியில், வாலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கமன்கெதர பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரன்வத்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் யோகியான பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத கோனவில பகுதியில், சிலாபம் பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காக பரல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 1,215 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மெத கோனவில பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட தொகையிலான மதுபானம் மற்றும் கோடாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0