உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
48 பார்வைகள்

நாடு முழுவதும் தற்போது மிகத் துரிதமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக 2026.06.15 முதல் 20.06.2026 வரை முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபை, கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம், கொமஷல் இராணுவப் படையணி என்பன சிரமதானம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இந்த வேலைத்திட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர், கௌரவ உறுப்பினர் மற்றும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவருமான லெச்சுமண் விஸ்வநாதன், உறுப்பினர் அமித்த ஆனந்த, உறுப்பினர் கணேசன் ராஜேந்திரன், உறுப்பினர் கணபதி கண்ணதாசன், கௌரவ உறுப்பினர் திருமதி ரசிக்கா ஜீவனி, கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் திரு வி. விஜேசுந்தரம் பொது சுகாதார பரிசோதகர்கள், கொமஷல் இராணுவப் படையணியை சேர்ந்த இராணுவத்தினர், கொட்டகலை நகர வர்த்தகர்கள், சுகாதார சேவையாளர்கள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என்போர் கலந்து கொண்டனர்.

இதன்போது கொட்டகலை நகரத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0