உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஆரச்சிகட்டுவ, செங்கல்ஓய, வெலிதுடுவ மண்கட பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஆரச்சிகட்டுவ, வைரன்கட்டுவ பகுதியில் வசித்து வந்த 13 வயதுடைய எஸ்.ஜே.எம்.லகிந்து சாமிக என்ற ஹெலம்பவட்டவன மகா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தின் இளைய மகனான சாமிக, கடந்த 19ஆம் திகதி மாலை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்து, பின்னர் தனது பாடசாலை நண்பனுடன் காலணி ஒன்று வாங்குவதற்காக ஆரச்சிகட்டுவ நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

சாமிக வீட்டிலிருந்து புறப்படும் போது அவரது தாயும் தந்தையும் வேலைக்காகச் சென்றிருந்ததால் அவர்கள் வீட்டில் இருக்கவில்லை.

சாமிகவின் தந்தை சிலாபம் பிரதேச செயலகத்தில் பணிபுரிவதோடு, தாய் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நண்பனுடன் ஆரச்சிகட்டுவ நகருக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற சாமிக, வீட்டிற்குத் தெரியாமல் செங்கல்ஓய வெலிதுடுவ மண்கட பகுதிக்குச் சென்று அங்கு நீராடிக் கொண்டிருந்த போது, செங்கல்ஓயாவின் ஆழமான பகுதியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் சாமிகவுடன் சென்ற நண்பன் தப்பியுள்ளதுடன், அவன் நீரிலிருந்து கரைக்கு வந்து தனது நண்பனைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து விரைவாக அந்த இடத்திற்கு வந்த மக்கள் இணைந்து நீரில் மூழ்கியிருந்த சாமிகவை மீட்டு ஆனவிழுந்தாவ வைத்தியசாலைக்குச் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

சாமிகவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சிலாபம் பொது வைத்தியசாலையில் நடைபெற்றதுடன், நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாமிகவின் சடலம் நேற்று இரவு வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டதுடன், இறுதிச் சடங்குகள் இன்று (21) ஆரச்சிகட்டுவ பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0