உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கல்முனை படுகொ*லை நினைவேந்தல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
40 பார்வைகள்

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன.

இதனை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதி சந்தியில் நேற்று சனிக்கிழமை(20) மாலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் கல்முனை வாழ் மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வின் முதலில் விளக்கேற்றல் நடைபெற்றதுடன் தொடர்ந்து உயிரிழந்தவர்ககளுக்காக 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சம்பவ நாட்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் எதிர்கால சந்ததிகளின் நலன் கருதி தத்தமது உரைகளில் குறிப்பிட்டனர்.

1990 ஜூன் மாதம் 11 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுமார் 600க்கும் அதிகமான பொலிஸாரைப் படுகொலை செய்ததை அடுத்து கல்முனை நகர் மீது இராணுவத்தினர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இதன் காரணமாக விடுதலைப் புலிகள் கல்முனை நகரில் இருந்து வெளியேறினர். இதையடுத்து பொதுமக்கள் மீதான தாக்குதல் 1990 ஜூன் மாதம் 20 இல் ஆரம்பமானது.

இதன்போது கல்முனை வாடி வீட்டு சந்தியில் நிலைகொண்டு இராணுவம், துணை இராணுவ குழுக்கள் இணைந்து தமிழ் பொதுமக்களைக் கடத்தினர் என்றும் பின்னர் அவர்கள் அனைவரையும் அங்குள்ள கடைகளுக்குப் பின்னால் வைத்து எரித்து படுகொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 250 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் 1990 ஜூன் மாதம் 27 இல் 75 பொதுமக்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டனர்.

மேலும் 27 பேரின் தலையற்ற உடல்கள் கல்முனைக் கடற்கரையில் கரையொதுங்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

மேலும் மொத்தமாக 7000 பேர் வரை 1990 ஜூன் மாதத்தில் கொல்லப்பட்டனர் என அவ்வமைப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0