உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பொதுமன்னிப்பு வழங்கினால் செம்மணி உண்மைகளை கூறுவேன்; உண்மையைக் கூற நினைப்பவர் இவ்வாறு கோருவாரா?

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

“பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தின் பிரதான குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில் சென்று சந்தித்தபோது, தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினால் மாத்திரமே உண்மைகளை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். உண்மையைக் கூறவேண்டும் என நினைப்பவர் இவ்வாறு நிபந்தனை விதிப்பாரா?”

இவ்வாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய விசேட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் குறித்துத் தன்னிடம் கூறிய அதிர்ச்சி தரும் விவரங்களை உள்ளடக்கியும், இது குறித்து மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அதனையடுத்து மேலதிக விவரங்களைக் கேட்டறியும் நோக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் முதற்கட்டமாகச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதியும் சந்திப்புகள் இடம்பெற்றன.

கடந்த ஜனவரி சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கான புதிய கடிதமொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளிடம் சோமரத்ன ராஜபக்ஷ கையளித்திருந்தார்.

செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்துத் தற்போது வரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அரசால் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர் அதில் சாடியுள்ளார். எனவே, இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, செம்மணியைப் பார்வையிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் சோமரத்னவின் அண்மைய வெளிப்படுத்தல்கள் மற்றும் விசாரணைகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர்,

“நான் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்குச் சென்று நேரடியாகச் சந்திக்கவில்லை. இருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த அவரைச் சென்று சந்தித்தார். அதன்போது தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தால் மட்டுமே செம்மணி உண்மைகளை வெளிப்படுத்துவதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியுள்ளார். ஒரு பாரிய குற்றத்தைச் செய்துவிட்டு, நீதியின் முன் நிபந்தனை விதிப்பவர்களின் வாக்குமூலங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்துச் சட்ட ரீதியாகவே தீர்மானிக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0