உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

“சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும் அர்த்தமற்ற ஒன்றாகும். ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானியாக அவர் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கக்கூடாது.” – இவ்வாறு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேயின் தற்போதைய மருத்துவ நிலைமை மற்றும் போராட்டம் குறித்துச் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, வாயினால் உண்பதைத் தவிர்த்தாலும், அவருக்குத் தேவையான அனைத்துப் போஷாக்குகளும் குருதி மூலமாகவும், குழாய் மூலமாகவும் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.

அவர் வாயினால் உண்பதை மட்டுமே தவிர்த்துள்ளாரே தவிர, பிற மருத்துவ வழிகளில் போஷாக்கு பெறுவதைத் தவிர்க்கவில்லை. பொதுவாக ஒருவர் 12 அல்லது 13 நாட்கள் உண்மையாகவே உணவின்றி இருந்தால், அவரால் இவ்வாறு இயல்பாக இருக்க முடியாது. எனவே, அவர் தற்போது மேற்கொண்டு வரும் செயல் ஓர் அர்த்தமற்ற நாடகமே தவிர வேறொன்றுமில்லை.

சுரேஷ் சலே ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானி மற்றும் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரியாவார் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், “அவர் குற்றவாளிகளுக்கு உதவியாக அல்லது கடந்தகாலக் குற்றங்களை மூடிமறைத்துப் பாதுகாப்பதாகச் செயற்படாமல், தனக்குத் தெரிந்த உண்மைகளைத் தகுந்த சட்டபூர்வ அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதே முறையானதாகும். அவர் உண்மையை வெளிப்படுத்தினால், அது நாட்டுக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் மிகவும் முக்கியமானது.” – என்றும் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0