உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அமைச்சுக்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி செயலாளர் விசேட சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
23 பார்வைகள்

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலுக்கு இணையாக, அமைச்சுக்களின் செயலாளர்களின் செயற்றிறனை மதிப்பீடு செய்வதற்கான செயற்றிறன் உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட்டன. அத்துடன், இந்தச் செயற்றிறன்களை வருடத்துக்கு இருமுறை மதிப்பீடு செய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஒவ்வொரு அமைச்சுக்கும் வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் மூலதனச் செலவுக்கு எவ்வாறு ஒதுக்கப்பட்டது, செயற்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இந்த வருடத்துக்குள் நிறைவடைய வேண்டிய திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

முதலீடுகளின் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களைத் தாமதமின்றி ஆரம்பிப்பதற்கு முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாகச் செய்துகொடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அமைச்சரவையின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித் ஆகியோருடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0