உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மட்டக்களப்பில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று(20) சனிக்கிழமை மதியம் கடையொன்றின் மீது ஏற்பட்ட தீப் பரவினால் ஒரு கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

குறித்த கடை உரிமையாளர் மதியம் சாப்பாட்டுக்காக கடையை மூடி விட்டு அவரது வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இப்றாகீம் என்பவருக்கு சொந்தமான இந்த புடவைக் கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் போது காத்தான்குடி நகர சபை தீ அணைக்கும் வாகனம் மட்டக்களப்பு மாநகர சபை தீ அணைக்கும் வாகனம் ஸ்தளத்துக்கு விரைந்து காத்தான்குடி பொலிஸார் காத்தான்குடி நகர சபை ஊழியர்கள் காத்தான்குடி பொது மக்கள் இளைஞர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு ஏனைய கடைகள் வீடுகளுக்கு பரவாமல் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

குறித்த இடத்துக்கு வேகமாக விரைந்த காத்தான்குடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அலவக்கோன் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் தீ அணைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன் மின் ஒழுக்காக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0