உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் பரிட்சார்த்த புகையிரத சேவை முன்னெடுப்பு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புகையிரத சேவையின் பரிட்சார்த்த நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (19) மதியம் இடம் பெற்றது.

-தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரத பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக குறித்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த புகையிரத பாதைகள் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில்  தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகளை முன்னெடுக்க இலங்கை புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற் கொண்டது.

அதற்கு அமைவாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19)  மதியம் மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புகையிரத சேவையின் பரிட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

-விரைவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

54 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

25 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0