உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கைத்துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

பொலன்னறுவை மாவட்டம், எலகெரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் எலகெரை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய நபராவார்.

சந்தேகநபர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றிருந்தார் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எலகெரை பகுதியில் நபர் ஒருவர் அனுமதியின்றித் துப்பாக்கியை வைத்துள்ளார் எனப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று சந்தேகநபரின் வீடு முற்றுகையிடப்பட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்கான 7 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அரச பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி ஓய்வுபெற்ற இவர், எதற்காக இந்தச் சட்டவிரோதத் துப்பாக்கியைத் தன்வசம் வைத்திருந்தார், இதன் பின்னணியில் ஏதேனும் குற்றச் செயல்கள் திட்டமிடப்பட்டிருந்ததா? அல்லது தனிப்பட்ட பகை காரணமா? என்ற கோணத்தில் எலகெரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

41 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

59 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0