உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

இலங்கை செய்திகள் 53 நிமிடங்கள் முன்
54 பார்வைகள்

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர சீனிபுர பகுதியில் நேற்று நடைபெற்ற விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது, தான் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் நிர்மாணித்த நெல் களஞ்சியசாலையையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கடந்த தேர்தல்களுக்கு முன்பு ஜனாதிபதி உள்ளிட்ட அரச அமைச்சர்கள் வயல்வெளிகளுக்குச் சென்று நெற்கதிர்களைக் கடித்துக் கொண்டு, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை தருவதாகப் பிரஸ்தாபித்தனர். ஆனால், இன்று ஒரு கிலோ நெல் 120 ரூபாவுக்கே கொள்வனவு செய்யப்படுகின்றது. விவசாயத்துறை அமைச்சரே ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபாய் செலவாகின்றது எனத் தெரிவித்துள்ள நிலையில், விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு 17 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

நெல்லைக் கொள்வனவு செய்வதாகக் கூறினாலும், தற்சமயம் ஈர நெல் 85 ரூபாவுக்கும், காய்ந்த நெல் 100 ரூபாவுக்கும் அரசு வெறும் 2 முதல் 3 சதவீத அளவிலேயே கொள்வனவு செய்கின்றது. எஞ்சிய நெல்லைக் கொள்வனவு செய்யும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாட்டின் தேவைக்கு அதிகமாக அரிசி உற்பத்தி செய்யப்படும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 இலட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசி வெளிநாடுகளிலிருந்து இறக்கமதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரிசி இறக்குமதியை எதிர்த்துப் பேசியவர்கள், இன்று அதனைச் செய்கின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் 30 முதல் 40 சதவீதமான மக்கள் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அஸ்வெசும உதவித் திட்டம் வெட்டப்பட்டு வருகின்றது.

அரசு மக்களுக்குப் பொய் சொல்வதை விடுத்து, மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து, வரிச் சுமையைத் தளர்த்தி மக்களுக்கு உண்மையான நிவாரணங்களை வழங்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

2 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

62 0 0