உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளி மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் பொருட்டு ஆளுமை விருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பயிற்சி வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது சமுர்த்தி திட்ட முகாமையாளர் எஸ்.எல். அஸீஸ் இணைப்பில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாக பிரதேச செயலக கணக்காளர் அமிர் அலி கலந்து கொண்டார்.

தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான தொழில் சந்தை மற்றும் நிதி மேலாண்மை போன்றவை பற்றி இந்த வேலைத்திட்டத்தில் விளக்க விரிவுரை வழங்கப்பட்டதுடன் பேசும் பயிற்சிகள், கேள்வி பதில் ஊடாக நேரடி வழிகாட்டல் போன்றவற்றையும் மேற்கொள்ளப்பட்டு பங்கேற்பாளர்களின் நம்பிக்கையும் திறனும் அதிகரிக்க வளவாளர்களால் விரிவுரைகள் நடத்தப்பட்டது.

மேலும் தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம். நபீல், சிறு கைத்தொழில் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல். அப்துல் ஜலீல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் சமுர்த்தி வங்கி சங்க முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எம்.அம்சார், திட்ட உதவியாளர் ஏ.எஸ்.எம். ஜஃபர், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ். சனுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

21 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

59 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0