உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உள்நாட்டுப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்கின்றோம்; சர்வதேச நீதியை வலியுறுத்தி மாபெரும் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
38 பார்வைகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் செம்மணியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் இந்தப் போராட்டத்துக்கான அவசர அழைப்பை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தரவுள்ள நிலையிலேயே, அதற்கு முன்னதாகப் பிற்பகல் 2 மணிக்கு இந்த மக்கள் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டியில் பின்வரும் பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச பங்கேற்பு: செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மற்றும் தடயவியல் விசாரணைகளுக்குச் சர்வதேச தரப்பினரின் நேரடி பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

உள்நாட்டுப் பொறிமுறை நிராகரிப்பு: பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக ஏமாற்றத்தையே அளித்து வரும் இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைகள் முற்றாக நிராகரிக்கப்படுகின்றன.

சர்வதேச நீதிக்கான கோரிக்கை: மனிதப் புதைகுழிகளுக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் சர்வதேசப் பொறிமுறையூடான நம்பகமான நீதியே பெற்றுத்தரப்பட வேண்டும்.

“செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட இலங்கையின் நீதி அமைச்சர் வருகை தரும் நிலையில்…” என்ற தலைப்பின் கீழ், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித என்புக் கூடுகளின் புகைப்படங்களைத் தாங்கி இந்த அழைப்புச் சுவரொட்டி வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று 19.06.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குச் செம்மணி அகழ்வாய்வுத் தளம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

நீதி அமைச்சரின் வருகையின் போது தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டையும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தும் நோக்கில் உறவினர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களை இந்தப் போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

49 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

59 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0