உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

செம்மணியில் மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக மேலும் 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 28ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் கண்டறியப்பட்டு, அவை முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு அவற்றுக்கான உத்தியோகபூர்வ இலக்கங்கள் இடப்பட்டன. அத்துடன், நேற்று சிறுவர் ஒருவருடைய என்புத் தொகுதி உட்பட 5 மனித என்புத் தொகுதிகள் புதைகுழியிலிருந்து முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் இதுவரை மொத்தமாக 387 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் 367 மனித என்புத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று தளம் இரண்டில் நடத்தப்பட்ட அகழ்வின் போது, உயிரிழந்தவர்கள் அணிந்திருந்த மற்றும் அவர்கள் உடல்களுடன் புதைக்கப்பட்ட சில முக்கிய சான்றுப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சில சிறிய பாசி மணித் துண்டுகள், 358 ஆம் இலக்கமிடப்பட்ட என்புத் தொகுதியின் நெஞ்சுப் பகுதியில் இருந்து உடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட கை வளையல் துண்டுகள், சில ஆணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பனவே சான்றுப் பொருட்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்தச் சான்றுப் பொருட்கள் அனைத்தும் உரிய முறையில் சுத்தம் செய்யப்பட்டு, இலக்கமிடப்பட்டு, வழக்கின் முக்கிய சான்றுகளாக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

49 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

59 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0