உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்


முல்லைத்தீவு – முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நாவலர்வீதி சீரமைப்பு வேலையில் ஒப்பந்தப் பிரச்சினை காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஐ.சி.டி.பி திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளரால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டபிற்பாடு குறைந்தபட்சம் மூன்று தொடக்கம் நான்கு மாதத்திற்குள் குறித்த நாவலர் வீதியின் சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் பதிலளித்தார்.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 17.06.2026நேற்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

குறிப்பாக அந்த வீதியை மிக அதிகளவான மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.

ஏறக்குறைய 2.5கிலோமீற்றர்தூரமான குறித்த நாவலர் வீதியானது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.

எனவே குறித்த வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஐ.சி.டி.பி வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் இதன்போது பதிலளிக்கையில்,

குறித்த நாவலர் வீதியானது வீதியானது உலகவங்கியின் நிதி ஒதுக்கீட்டில், ஐ.சி.டி.பி வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த வீதியைச் சீரமைப்புச் செய்வதற்காக உரியவகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதற்கமைய ஒப்பந்த நிறுவனமொன்றுடன் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்த வேலைத்திட்டம் அந்த ஒப்பந்த நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த ஒப்பந்த நிறுவனம் பிறிதொரு ஒப்பந்தவேலையில் முறையற்ற விதத்தில் செயற்பட்டதன் காரணமாக கறுப்புப்பட்டியலில் சேர்க்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஒப்பந்த நிறுவனத்துடன் மன்னார் மாவட்டத்தில் செய்துகொண்ட ஒப்பந்தமொன்றை முறையான நடைமுறைகளைப் பின்பற்றி முடிவுறுத்தியுள்ளோம். அந்த வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளியை மீளவும் கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதன் பிற்பாடு இந்த நாவலர் வீதிச்சீரமைப்பு விடயத்தில் அந்த ஒப்பந்ததாரர் மிகவும் மந்தகதியில் செயற்பட்டுவருகின்றார்.

எனவே நாவலர் வீதியைச் சீரமைப்பதற்கு நாம் அந்த ஒப்பந்ததாரருடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்தி, மீண்டும் உரியவகையில் ஒப்பந்தப்புள்ளியைக் கோரி, வேறு ஒப்பந்ததாரரிடம் குறித்த ஒப்பந்த வேலையைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

ஒரு ஒப்பந்ததாரருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கு சில நடமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டியிருக்கின்றது. அந்த நடைமுறைகளைப் பின்பற்றியே ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்த நடமுறைகளைப் பின்பற்றி ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. ஆகவே நாம் அந்த நடமுறைகளைப் பின்பற்றியே ஒப்பந்தத்தினை முடிவுறுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக நாவலர்வீதி சீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக அந்த ஒப்பந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்திக்கொள்வதற்கு 75வீதமான நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டன.

இவ்வாறு அந்த நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்திவிட்டு, மீண்டும் உரியவகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு புதிய ஒப்பந்ததாரரிடம் இந்த வேலையை கையளிக்கவேண்டும்.

அந்தவகையில் புதிய ஒப்பந்ததாரரின் மூலம் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று தொடக்கம் நான்கு மாதங்களாவது தேவைப்படும் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0