உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக இரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை இரத்துச் செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடவும் திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டிய சுற்றறிக்கைகளை தற்காலத்திற்கு உகந்தவகையில் திருத்துவதற்காக அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ‘சுற்றறிக்கைகள் திருத்தக் குழுவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்கவின் தலைமையிலான இந்தக் குழுவில் ஜனாதிபதி அலுவலகத்தின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ விவகாரங்கள் பிரிவின் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்ட ஆலோசகர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் (காணி), தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், மேல் மாகாண காணி ஆணையாளர், கிழக்கு நுவரகம்பலாத பிரதேச செயலாளர், மதிப்பீட்டு திணைக்களத்தின் பிரதி பிரதம மதிப்பீட்டாளர், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் (காணி) ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாகச் செயற்படுவர்.

இக்குழுவின் அழைப்பாளராக காணி ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய சட்ட விதிகளுக்குள், அரச வருமானம் சாதகமான முறையில் அதிகரிக்கும் வகையில், குத்தகைதாரர்கள் பாதிக்கப்படாதவாறு வரி வசூலிப்பில் நம்பகமான, சீரான மற்றும் நிலையான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நீண்ட கால குத்தகைகளை வழங்கும்போதும், இலவச காணி கொடுப்பனவுப் பத்திரங்களை வழங்கும்போதும் வசூலிக்கப்படும் வருடாந்த வரிப் பணத்தை மீளாய்வு செய்தல், நீண்ட கால குத்தகைகளுடன் தொடர்புடைய ஏனைய சுற்றறிக்கைகளில் தற்காலத்திற்குப் பொருத்தமான மாற்றங்களைச் செய்தல், அச்சுற்றறிக்கைகளை தேவைகளுக்கும் சட்ட விதிகளுக்கும் இணங்குமாறு திருத்துதல், சுற்றறிக்கைகள் தொடர்பான கட்டளைகளை திருத்துவதற்கும் புதிய கட்டளைகளை தயாரிப்பதற்கும் பரிந்துரைகளை வழங்குதல் என்பன இந்தக் குழுவின் பணியாகும்.

இதற்கமைய, சுற்றறிக்கைத் திருத்தம் தொடர்பாக நிபுணர் குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறைந்த பயன்பாட்டிலுள்ள அரச காணிகளை தற்காலத்திற்கு உகந்த வகையில் பயன்படுத்துவதற்காக புதிய கொள்கையொன்றை வகுக்க வேண்டும் எனவும் இங்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பில், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரவீந்திர பத்திரணகே, காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீரஆரச்சி உள்ளிட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களும், நிதி அமைச்சு மற்றும் விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

50 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

64 0 0