யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று (18) காலை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி, பூனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பூனாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!
யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில்...
சுகீஸ்வர பண்டார கைது.!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில்...
ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!
667 மில்லியன் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள ஹட்டன் பேருந்து டிப்போவை நேற்று (17) ஆம் திகதி மாலை நேரில் பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்...
மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியும் குற்றவாளிகளுக்கு சட்டத்தினால் சரியான தீர்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக்கோரியும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப...
காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!
நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக நேற்று புதன்கிழமை (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!
அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக இரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை இரத்துச் செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடவும்...
தங்கம் கடத்த முயன்ற பயணிகள் மருத்துவ பரிசோதனையில் சிக்கினர்.!
காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட ஸ்கானிங் பரிசோதனையில் நால்வர் உடம்புக்குள்...
தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொ*லையின் அசைக்க முடியாத சாட்சி செம்மணி.!
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாகவும், இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானத்தின் அடையாளமாகவும் செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது...
வீடுகளில் கைவரிசை காட்டிய நபர் கைது.!
மொரட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ...
அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
கொழும்பு, கிராண்ட்பாஸ் சேதவத்தை களனி பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...










