உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் மீது தாக்குதல்; ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
19 பார்வைகள்

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்த காணொளி ஒன்று தொடர்பாக, மதவாச்சி பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 09ஆம் திகதி மதவாச்சி பகுதியில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த ஒருவர், அதன் உரிமையாளரைத் தாக்கும் காட்சிகள் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பரவி வந்தன. இது தொடர்பில் கடந்த 10ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது குறித்து மதவாச்சிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று புதன்கிழமை (17) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இந்தத் தாக்குதல் கப்பம் கோரி நடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட போதிலும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது சந்தேக நபருக்கும் சிகையலங்கார நிலைய உரிமையாளருக்கும் இடையே இருந்த பழைய பகைமை காரணமாகவே நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை (18) மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மதவாச்சிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

2 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

50 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

61 0 0