உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யுவதி ஒருவர் சடலமாக மீட்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
40 பார்வைகள்

கண்டி மாவட்டம், பன்விலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் தனது வீட்டின் கட்டிலில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பன்விலை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்று மாலை மேற்படி யுவதியின் பெற்றோர், உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அந்த யுவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர், வெளியில் சென்றிருந்த பெற்றோர் இரவு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய போதே, மகள் கட்டிலில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சடலம் மீட்கப்படும் போது அந்த யுவதியின் வாய்ப் பகுதியில் இருந்து அதிகளவில் இரத்தம் வெளியேறியிருந்தது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுவதியின் மரணத்தில் பலத்த சந்தேகம் காணப்படுவதால் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

50 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

64 0 0