உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது.

குறித்த முன்மொழிவினை வைத்து உரையாற்றிய தவிசாளர் மயூரன் அவர்கள் தன்னுடைய உரையில்,

இனஅழிப்பு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட எமது உறவுகள் இன்று செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றனர்.

எம்மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பின் சாட்சியகமாக இவ் மயானம் காணப்படுகின்றது. இந் நிலையில் இன அழிப்பின் சாட்சியங்களை பாதுகாக்க வேண்டியதும் அதனை இளைய தலைமுறைக்கு கடந்த வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

குறித்த இந்து மயானம் எமது சபை எல்லைக்குள் காணப்படுகின்ற நிலையில் இதனை ஒரு மயானமாக தொடர்ந்து பேணாமல் இது எம்மீதான இனஅழிப்பின் ஒரு சாட்சியகமாக நினைவகமாக பேணுவதற்குரிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவினை முன்வைப்பதோடு,

குறித்த விடயம் தொடர்பில் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான சபையினருடன் கலந்துரையாடல் செய்து அது தொடர்பான விபரங்களுடன் குறித்த முன்மொழிவினை உங்களின் ஏகமனதான ஆதரவுடன் ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்காக அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

53 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0