உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இன்று இந்தியா – நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளில் 26 பேர் கடைசி நேரத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த 26 பயணிகளையும் அவசர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இடையே தற்போது ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சேவை இடம்பெற்று வருகிறது. இதற்கமைய, இன்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து 117 பயணிகளுடன் புறப்பட்ட இக்கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கிப் பயணிப்பதற்காக 146 பயணிகள் துறைமுகத்தில் தயாராகக் காத்திருந்தனர்.

இவ்வாறு காத்திருந்த 146 பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே, சந்தேகத்தின் பேரில் 26 பயணிகளைக் கப்பலில் பயணிக்க அனுமதிக்காது அதிகாரிகள் திடீரெனத் தடுத்து வைத்துள்ளனர்.

அவர்கள் எதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் என்ன காரணத்துக்காக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவம் காரணமாகக் காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0