உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
23 பார்வைகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்கு மிக மோசமாக உயரும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

“கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட 1971/10 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, அதன் பெறுமதியில் 15 சதவீத வரிச்சலுகையை அரசு வழங்கி வருகின்றது.

புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது, அவற்றை இறக்குமதி செய்யும் முதன்மை முகவர் நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விலைப்பட்டியல் அடிப்படையிலேயே சுங்கத் திணைக்களம் வரியைக் கணக்கிடுகின்றது.

இதனைக் கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் சுங்கத் திணைக்களத்திற்கு இல்லை. அந்த நிறுவனங்களுக்கு உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்த விலைக்கே வாகனங்கள் கிடைக்கின்றன.

ஆனால், தனிநபர்களோ அல்லது ஏனைய நிறுவனங்களோ பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, சுங்கத் திணைக்களம் உற்பத்தியாளரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, அதில் உள்ள அதிகபட்ச சில்லறை விலையின் அடிப்படையிலேயே வரியைக் கணக்கிடுகின்றது.

அதாவது, வெளிநாட்டு ஏலங்களில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கும், இலங்கையில் புதிய வாகனங்களுக்கு நிகரான வரியே விதிக்கப்படுகின்றது. இந்த அநீதியான வரிவிதிப்பால் ஏற்படும் பாரிய சுமையைத் தணிப்பதற்காகவே அன்று 15 சதவீத வரிச்சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது.

பயன்படுத்திய வாகனங்களின் தேய்மானம் அல்லது அவற்றின் பழமையைக் கருத்திற் கொண்டு தற்போதைய வரிக் குறைப்பு எதுவும் செய்யப்படுவதில்லை.

உதாரணமாக, 10 வருடங்கள் பழமையான ‘குளிரூட்டி வண்டி’ ஒன்றினை வெளிநாட்டு ஏலத்தில் 30 இலட்சம் யென் மதிப்புக்கு வாங்கினாலும், அதன் புதிய வாகனத்தின் விலை 120 இலட்சம் யென்களாக இருந்தால், இலங்கை சுங்கத் திணைக்களம் புதிய வாகனத்தின் விலையான 120 இலட்சம் யென் மதிப்புக்கே வரி விதிக்கின்றது.

இதனால், வெளிநாட்டு ஏலத்தில் மிகக் குறைந்த விலைக்கு வாகனங்களை வாங்கினாலும், இலங்கைக்குக் கொண்டு வந்து சுங்க வரி செலுத்தி விற்கும் போது அதன் விலை பல மடங்கு உயர்ந்துவிடுகின்றது.

வெளிநாட்டு ஏல விலையுடன் ஒப்பிட்டு அரசு நியாயமான முறையில் வரியை விதித்தால், மக்களுக்கு தற்போதைய விலையை விடக் மிகக் குறைந்த விலையில் வாகனங்களை வழங்க முடியும்.

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது நடைமுறையிலுள்ள 15 சதவீத வரி வரம்பு நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் அதிரடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வரித் திருத்தம் அமல்படுத்தப்பட்டால், இலங்கையில் சாதாரண நடுத்தர வர்க்க மனிதன் ஒருவனுக்குச் சொந்தமாக வாகனம் வாங்குவது என்பது முற்றிலும் இயலாத காரியமாகிவிடும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

53 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0