உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஆரம்பிக்கப்படவுள்ள நானுஓயா – பதுளை புகையிரத சேவைகள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தது.

ஆறு மாதங்களாக தடை பட்டிருந்த நானுஓயா முதல் பதுளை வரையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
இந்த புகையிரத வீதியில் தாழிறக்கம் ஏற்பட்ட அனைத்தும் பகுதிகளையும் நானுஓயா புகையிரத நிலையத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், அதிகாரிகள், பொறியியலாளர்கள் இணைந்து துரிதமாக செயல்பட்டமையால் மீண்டும் இச் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும் நானுஓயா முதல் நாவலப்பிட்டி வரையான வீதிகள் வெகு விரைவில் செப்பனிடப்பட்டு அச் சேவையும் விஸ்தரிப்பு செய்யப்படவுள்ளது என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

45 0 0