உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “சிறு குற்றங்கள்” எனும் விழிப்புணர்வு கருத்தரங்கு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்காக “சிறு குற்றங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (17) பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் 10,11 மற்றும் தரம் 12 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு விசேட வளவாளராக சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.இக்றாம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறு குற்றங்கள் தொடர்பாக தெளிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ.கமறுந்நிஸா, ஜே.வஹாப்தீன் உட்பட சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ.எப்.நிபாஸா, ஏ.ஜே.எப்.றினாபா, தரம் -11 வலயத் தலைவர் எம்.சி.நஸ்றுடீன் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

94 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

45 0 0